ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கம் “தங்களது நிலையை புதுப்பித்துகொள் வதன்  மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்ற கருத்தின்கீழ் சட்ட விரோதமாக தங்கியிருப்போர் பயன்பெறும் வகையில் பொது மன்னிப்பு ஒன்றை வழங்கியுள்ளது  ( 01/08/2018 முதல் 31/10/2018ம் ) திகதி வரை இந்த சேவை அமுலிலிருக்கும்.

பின்வரும் இரண்டு நிலையின் கீழ், சட்ட விரோதமாக தங்கியிருப்போர் பொது மன்னிப்பு  (அம்னஸ்டியை )பயன்படுத்திக்கொள்ள முடியும்.

A. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர் தெண்டங்கள் இல்லாமல்/ அல்லது சட்ட ரீதியாக தங்களது தேவைகளை முடித்துக்கொள்ள விரும்புவோர்.

B. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர் தங்கள் விசாவை புதுப்பித்து இங்கேயே தொழிலை தொடர விரும்புவோர்.

அரபு அமீரகத்தின் ஆட்பதிவு மற்றும் குடிவரவு குடியகள்வு திணைக்களத்தின் கீழ் இயங்கும் பின் வரும் மூன்று மத்தியஸ்தலங்களை அணுகி தங்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அபு தாபி எமிரேட்ஸ் ,

1- ஐ.இ.ஷஹாமா ,

2- அல்அய்ன் மற்றும்,

3- கர்பியா  (மேற்கு பிராந்தியம்).

காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை குறித்த நிலையங்கள் சேவையில் இருக்கும்.

A. செல்லுபடியான கடவுச்சீட்டை   வைத்திருக்கும்   நிலையில்/செல்லுபடியான விசா இல்லாதோர் செய்ய வேண்டியவை.

இந்நிலையில் இருப்போர் மேற்கூறப்பட்ட மூன்று சேவை நிலையன்களில் ஒன்றை  பயணச்சீட்டுடன்(Ticket)  அணுகி வெளியேறும் அனுமதிப்பத்திரத்தை (Exit Permit ) பெற்று ஏளு நாளைக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் .

B. காலாவதியான கடவுச்சீட்டுடன் / செல்லுபடியான விசா இல்லாதோர்    செய்ய வேண்டியவை.

இந்நிலையில் இருப்போர் உடனடியாக இலங்கை தூதுவராலயத்தை அணுகி (எமெர்ஜென்சி  எக்ஸிட் பெர்மிட்டை ) பெற்று பின்பு மேற்கூறப்பட்ட மூன்று நிலையன்களில் ஒன்றை  பயணச்சீட்டுடன் (Ticket)  அணுகி எக்ஸிட் பெர்மிட்டை  பெற்று ஏழு நாளைக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் .

C. கடவுச்சீட்டோ / வீசாவோ இல்லாதோர் செய்ய வேண்டியவை.

இந்நிலையில் இருப்போர் உடனடியாக இலங்கை தூதுவராலயத்தை அணுகி (Emergency Exit Permit) பெறுவதற்கு வேண்டுதலை முன்வைத்து   பின்பு மேல்கூறப்பட்ட மூன்று நிலையன்களில் ஒன்றை  பயணச்சீட்டுடன் சென்று எக்ஸிட் பெர்மிட்டை  பெற்று ஏழு நாளைக்குள் வெளியேற வேண்டும்

சட்ட விரோதமாக ( UAE )  தங்கியிருப்போர் செய்ய வேண்டியவை.

தங்களது விசாவை மாற்ற  அல்லது ஒழுங்கு படுத்த் விரும்புவோர் செய்ய வேண்டியவை.

இந்நிலையில் இருப்போர் தண்டமோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை களுக்கு உள்ளாகாமல் பொது மன்னிப்பு காலத்தின் மூலம் பயன் பெற்றுக்கொள்ள முடடியும்.

இந்த பொது மன்னிப்பு காலத்தை  பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர் செல்லுபடியான தங்களது கடவுச்சீட்டுடன்  பின் வரும் ஒழுங்குகளைப் பேன  வேண்டும்.

A. செல்லுபடியான விசா இல்லாத ஆறு மாத காலத்துக்கு செல்லுபடியான

கடவுச்சீட்டு வைத்திருப்போர் செய்யே வேண்டியவை .

இந்நிலையில் இருப்போர் The Ministry of Human Resources and Emiratization  அணுகி 500.00 திர்ஹம் கட்டணம் செலுத்தி தங்களுக்கான ஆறு மாத செல்லுபடியான விசாவை பெற்றுக்கொள்ள முடியும் .

B. ஆறு மாத செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான விசாவும்

இல்லாமல் இருப்போர்  செய்யவேண்டியவை .

இந்நிலையில் இருப்போர் உடனடியாக அபு தாபியில் அமைந்திருக்கும் தூதுவராலயத்தை அணுகி புதிய பயணச்சீட்டுக்கு விண்ணப்பித்து அதக்குப்பிறகு   The Ministry of Human Resources and Emiratization அனுகி 500.00 திர்ஹம் செலுத்தி ஆறு மாத காலத்துக்கு செல்லும்படியான விசாவை பெற்றுக்கொள்ள முடியும் .

 

 

(Lost Passport  கடவுச்சீட்டு) இல்லாதோர், புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொளள் விரும்பினால் கட்டாயமாக சட்டரீதியாக Police Report ஒன்றை பெற்றிருக்க வேண்டும் குறிப்பு பாஸ்போர்ட் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும், அதல்லாதவை Non – Machine Readable passport (NMRP) இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.

(புதிய சாதாரன நிலை பாஸ்போர்ட் ஒன்றை வெளியிடும் அதிகாரம் Colombo ல் அமைந்திருக்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திட்கே உரித்தானதாகும், இந்த சேவையை பெற்றுக்கொள்ள இரண்டு மாதம் தேவைப்படும் .எனவெ இந்த Mission பொது மன்னிப்புக் காலத்துக்குள் விண்ணப்பிபோருக்கு மிக விரைவில் அவர்களுக்கான பாஸ்போர்ட் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை சம்பந்தமகா Colombo திணைக்களத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

எனவே புதிய பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இருப்போர் கீழ் காணும் இணைய  தலத்தை  பார்வையிடவும் .

www .embassyofsrilankauae.com

தங்களது வேலை தளங்களில் இருந்து வெளியேறி சட்ட விரோதாமாக தங்கிருப்போர் தங்களது (Absconding ) இல்லாமல் செய்வதட்கு(Immigration Department ) குடிவரவு திணைக்களம் சென்று 500.00 திர்ஹம் செலுத்தி Absconding இல்லாமல் செய்து ஆறு மாத கால விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் .

வேலை தளங்களில் இருந்து வெளியேறி சட்ட விரோதாமாக தங்கிருப்போர் தங்களது (Absconding ) யை நீக்கி  500.00 திர்ஹம் செலுத்தி (Exit permit )  பெற்று அவர்கள் எவ்வித தடையுமின்றி UAE க்கு   மீண்டும் வரலாம் .

எவ்வாறாயினும் , UAE   திரும்பி வர விரும்பாதோர், Absconding  முறை களை ரத்து செய்யாது, நாட்டை விட்டு செல்வதற்கு விண்ணப்பிக்க முடியும் . இதற்கான 220.00 திர்ஹம் செலுத்தி (Exit permit ) Immigration மூலமாக  பெற்றுக்கொள்ள முடியும்.

சட்ட விரோதமாக (UAE) க்குள் நுழைந்ததோரும் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கலாம் , ஆண் /பெண் கட்டாயம் (EMERGENCY EXIT PERMIT) க்கு விண்ணப்பித்து மேட்கூறப்பட்ட மூன்று சேவை நிலையன்களில் ஒன்றை    பயணச்சீட்டுடன்( TICKET) அனுகி இரண்டு வருட( RE -ENTRY )தடை உத்தரவுடன்  EXIT PERMITடை   பெற்றுக்கொள்ளலாம் .

பெற்றோர் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் காலத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் பொதுமன்னிப்பு காலத்தில் விண்ணப்பித்து அவ்ரகளுக்கான பயன்களையும் பெறலாம். (பிள்ளை பிறந்ததட்கான பதிவுகள் உரிய திணைக்களத்தில் பதியப்பட்டிருக்க வேண்டும் ).

குற்றவியல் தண்டனைகளில் வழக்கு பதியப்பட்டோர் இந்த பொது மன்னிப்புக்கு உள்வாங்கப்படமாட்டார்கள்  அவர்கள் இந்த நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமையவே  நடாத்தப்படுவர் .

இது தொடர்பான மேலதிக தகவள்களுக்கு கீழ் காணும் தூதுவராலய  உத்தியோகத்தர்களைத் தொடர்பு  கொள்ள முடியும் .

 

 

இலங்கை தூதுவராலயம்,

அபுதாபி,

ஐக்கிய அரபு இராச்சியம்.

 

செல்வி எஸ் .டி .எச் .கே .ரூபரத்ன ,இரண்டாம் செயலாளர் ,
தொ
Tel: 026322129
திருமதி.ஏ .எஸ் .ராஜபக்க்ஷ ,மூன்றாம் செயலாளர் ,
தொ
Tel: 026332271
திருமதி.கே .ஐ .வி .ஐ .காரியவசம் ,கோன்சுலார் assistance
தொ
Tel: 026352460
திரு .ஏ.ஏ.எம்.அன்ஹரி PRO தொ Tel: 026316444 – 210
திரு .எம்.ஐ .எம்.சியாம் PRO தொ Tel: 026316444 – 210
திரு .ஹஷீம் ,கிளறிகள் உத்தியோகத்தர் தொ Tel: 026316444
திருமதி.எம்.ஜீ.எம்.ஷாமலி கிளறிகள் உத்தியோகத்தர் தொ Tel: 026316444 – 205